மிரட்டும் பி.டி.கத்தரிக்காய்

ஆசிரியர்:

Category விவசாயம்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 48
First EditionSep 2014
Weight100 grams
Dimensions (H) 14 x (W) 14 x (D) 22 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். - சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட பரதம், அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு | ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும், குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெருக்குவதால், உடலில் அரிப்பு, தோலில் தடிப்பு, உடல் சிவத்தல் தொடங்கும். இன்னும் சிலருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்பட்டு சுவாசத் திணறல், அதைத் தொடர்ந்து சிறுநீரகச் செயல் முடக்கம் என ஒவ்வாமையின் உச்சம் தொடரக்கூடும். அதன் விளைவாக மரணம்கூட நிகழலாம்.
உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கில் தனக்கு ஆலோசனை அளிக்க அமைத்த தொழில் நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையில் இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லை, அத்தகு ஆய்வுகளை செய்திடும் அறிவியல் வல்லுனர்களும் இல்லை. அத்தகு ஆய்வகங்களும், வல்லுனர்களும் உருவாக்கிய சோதனைகள் நடத்தி பாதுகாப்பானது என்பதை அறிந்த பின்னரே இத்தகு வயல் வெளி சோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக் குழுவானது ஒருமித்த குரலில் இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையில்லை என்றும் வயல் வெளி சோதனைகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :