மிதிலா விலாஸ்

ஆசிரியர்: லஷ்மி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPAPPER BACK
Pages 416
First EditionJan 1969
29th EditionMay 2017
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 3 cms
₹220.00 $9.5    You Save ₹11
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிறந்த நாவலாசிரியரான 'லக்ஷ்மி' அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள். லக்ஷ்மி அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாபாத்திரங்களாக்கி, சிறந்த நாவல்களாகப் படைத்துள்ளார்.
இந்த நாவல் மிதிலா விலாஸ்' - மிதிலா விலாஸ் என்னும் மாளிகைக்குள் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை நாம் நாள்தோறும் எங்காவது சந்தித்திருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. கதாபாத்திரங்களைப் படைப்பதில் ஆசிரியர் தமது திறமை முழுவதையும் புலப்படுத்துகிறார்.
இந்த நாவலில் வரும் தேவகி சிறந்த படைப்பு. ஆரம்ப முதல் இறுதி வரை நமது அநுதாபத்துக்குரியவளாகத் தோன்றுகிறாள். மற்றொரு பாத்திரமாக கிரிஜா பெண் குலத்திற்கே ஓர் எச்சரிக்கையாக அமைகிறாள். மற்றும் மைதிலி, தர்மாம்பாள், பசுபதி அய்யர் போன்ற கதாபாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது.
மிதிலா விலாஸ்' - தொடர் கதையாக பிரபல வாரப் பதிப்பான ஆனந்த விகடனில் வெளிவந்தது. இந்த நாவலை வெளியிட அநுமதி அளித்த டாக்டர் எஸ்.திரிபுர சுந்தரி - லக்ஷ்மி அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லஷ்மி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :