மிதவை

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category நாவல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 152
ISBN978-81-8446-077-5
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘மிதவை' முதற்பதிப்பு 1986 - ல் அன்னம் வெளியீடாக வந்தது. ஆயிரம் படிகள் விற்றுத் தீர ஆறாண்டுகள் ஆயின என்பதில் கவிஞர் மீராவுக்கு வருத்தம் இருந்தது. நல்ல நாவல்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் அபாயம் தமிழ் நாவல் உலகில் எப்போதும் நிரந்தரமானது. எல்லாவற்றுக்கும் நாளும் கோளும் சரியாக இருக்க வேண்டும்.
தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல. எவ்வளவு தாமதமாக இரண்டாம் பதிப்பு வந்தாலும் எனது நாவல்கள் விற்றுப் போகின்றன என்ற மகிழ்ச்சியை கோவை விஜயா பதிப்பகத்தின் மூலம் உணருகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

நாவல்கள் :

விஜயா பதிப்பகம் :