மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன?

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category சமூகம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperpack
Pages 46
First EditionJan 2018
ISBN978-81-77202-89-2
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), செல் நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர், பிரேசில், இந்தியா போ மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன , சிந்தனைகளின் அடிப்படையில் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கியவர். கல்வி என்பது நவீன உலகிற்குத் தேவையான , பயிற்சியாளர்களை உருவாக்குவதல்ல. மாறாக, அது மனிதர்களின் தனித்துவங்களை மீட்டெடுப்பது, மனிதர்கள் பிற உயிரினங்களிலிருந்து, வேறுபடும் புள்ளிகளில் இரண்டு முக்கியமானவை. அவர்கள் தாம் , வாழும் உலகை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றை அவர்கள், எதிரொளிக்கிறார்கள்; அவற்றோடு வினைபுரிகிறார்கள்; மாற்றி ! அமைக்கிறார்கள். மனிதர்களின் இன்னொரு தனித்துவம், அவர்கள் உரையாடுபவர்கள் என்பது. உரையாடுதல் என்பது ஏதோ டைம் பாசிங்' வேலை அல்ல, அது எதிரே இருப்பவர்களை மாற்றுவது: அதனூடாக நாமும் மாறுவது.ஆனால் இந்த இரண்டு பண்புகளையும் மழுங்கடிப்பதாகவே இன்றைய உலகம், சமூக அமைப்பு, கல்விமுறை எல்லாம் உள்ளன, மனிதர்களை இந்த உலகை எதிரொளித்து எதிர்வினை ஆற்றக் கூடியவர்களாகவும், அவர்களிடம் உறைந்துபோன மௌனத்தை உடைத்து அவர்களை , உரையாடல் புரிபவர்களாகவும் ஆக்குவதுதான் கல்வியின் நோக்கம் | என்கிறார் ஃப்ரெய்ரே. அதற்கான தனது அணுகல்முறையை, உணர்வூட்டுதல் (conscientisation) என்கிறார்.உரையாடும் திறனை மனிதர்கள் எப்படி இழக்கின்றனர் ? உரையாடலுக்கு எதிரான நடவடிக்கைகளும் பண்பாடுகளும்தான் அவர்களைச் சூழ்ந்துள்ளன. அவை நம்மீது மெளனத்தைப் போர்த்துகின்றன. இன்றைய ஆசிரியர்-மாணவர் உறவு, கல்வி நிலையங்கள், பாடநூல்கள் எல்லாமே நம்மீது மெளனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன எனக் கூறும் | ஃப்ரெய்ரே. அத்தோடு நின்றுவிடுவதில்லை. இந்த மௌனத்தைத் தகர்க்கும் மாற்றுக் கல்விமுறை ஒன்றை முன்வைக்கிறார்.பாவ்லோ ஃப்ரேயரின் இந்த மாற்றுக் கல்விமுறையை எளிமையாகவும் சுருக்கமாகவும் இந்த நூலில் முன்வைக்கிறார் அ.மார்க்ஸ்,

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :