மார்க்ஸ்-எங்கெல்ஸ்-மார்க்சியம்

ஆசிரியர்: வி.ஐ.லெனின்

Category அரசியல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 216
First EditionJan 2014
ISBN978-93-92213-19-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கார்ல் மார்க்ஸுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீனகால பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்ஸையும் பிரெடெரிக் எங்கெல்ஸையும் விதி ஒன்றுசேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை : இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள : வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்ஸின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளி வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணிதிரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே.

உங்கள் கருத்துக்களை பகிர :