மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி...

ஆசிரியர்: இரா.பாரதிநாதன்

Category கம்யூனிசம்
Publication காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 136
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கலை இலக்கியம், என்பதெல்லாம் எதற்காக? அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இதனால் என்ன பயன்? ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நகர்த்தவே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது கதையும், கவிதையும், பாட்டும், கூத்தும் யார் கேட்டார்கள்? என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இப்படி கேட்பவர்கள் பலரும் வயது வித்தியாசமில்லாமல் இருக்கிறார்கள். இந்த புலம்பலில் நிச்சயம் ஒரு விரக்தியும், எரிச்சலும் தொற்றிக் கொண்டிருப்பதை நம்மால் எளிதாக கண்டுக் கொள்ள முடியும். இந்த ரசனையற்றவர்கள் வாழ்க்கையை தட்டையாகப் பார்க்கும் மனோபாவம் உள்ளவர்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அனைத்து வர்க்கத்திலும் இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடும் இவர்களுக்குள் இல்லை. இன்னும் சிலர் எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா.பாரதிநாதன் :

கம்யூனிசம் :

காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் :