மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்

ஆசிரியர்: மறைமலையடிகள்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatHardbound
Pages 946
ISBN978-93-88625-35-7
Weight1.20 kgs
₹1100.00 ₹1045.00    You Save ₹55
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிவம் தானேவந்து அருள்செய்யப் பெற்றார் தம்முள் மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பெற்ற அப்பெறலரும் பேற்றைத் தம்மைச் சார்ந்த எம்போல்வா ரெல்லாம் எளிதிற் பெற்றின்புற்றிருக்குமாறு தாம் திருவாய் மலர்ந்த திருவாசகச் செந்தமிழ் மாமறைவழியே வழங்கிய வள்ளன்மை யுடையராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனி முதன்மையுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல் இறைவனைக் கண்டு அவனருளை முற்றப் பெற்றார் பலர் அவர்க்கு முன் இருந்தது உண்மையாயிருக்கலாமேனும், அவரெல்லாந் தாங் கண்ட அருட்பெருங்காட்சிகளையும், அவற்றால் தாம் பெற்ற பேரின்ப நிலைகளையும், இறைவன் தமக்குச் செய்த அருட்பேருதவிகளையும், தாம் இறைவற்கு ஆளாய் நின்று உருகின வகைகளையும் இவர் போற் செந்தமிழ்ப்பாக்களில் நிறைத்து யாமெல்லாம் பருகிக் களிக்க வழங்கியவரல்லர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மறைமலையடிகள் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :