மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 2)

ஆசிரியர்: என்.சொக்கன்

Category ஆய்வு நூல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 224
ISBN978-81-8493-904-0
Weight300 grams
₹250.00 ₹212.50    You Save ₹37
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எப்போதும் எதையாவது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என்ன அவசியம்? தமிழையே எடுத்துக்கொள்ளுங்கள். பெயர்ச் சொல், உயிர்ச்சொல், உயிரளபெடை, ஒற்றளபெடை, நேர் நேர் தேமா என்று சூத்திரங்கள் போல் சிலவற்றை மனனம் செய்து கொள்வதன்மூலம் தமிழ் இலக்கணத்தைக் கற்கவோ கற்பிக்கவோ முடியாது. அதேபோல் இலக்கியம் என்பது கடவுள் வாழ்த்தோடு தொடங்கி மனப்பாடச் செய்யுளோடு முடிவடைந்துவிடும் ஒரு விஷயமும் அல்ல. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு வண்ண மயமான உலகம். புலவர்களும் மன்னர்களும் சான்றோர்களும் சாமானியர்களும் ஒன்றுசேர்ந்து சேகரித்த பெரும் புதையல் அது. அந்த உலகை மனப்பாடம் செய்யமுடியாது, சூத்திரங்களால் விளங்கிக்கொள்ளவும் முடியாது. நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். தமிழைக் கற்பதற்குப் பதில் தமிழை ரசிக்க ஆரம்பிக்கவேண்டும். என். சொக்கன் எழுதிய இந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுதான். கதையை, கவிதையை, பாடலை, ஆடலை, அழகை, அறிவை, மண்ணை , மனிதர்களை ரசிக்க இந்தப் புத்தகம் ஓர் அற்புதமான தூண்டுதலாக இருக்கப்போகிறது. உற்சாகத்தோடு வாசிக்க ஆரம்பியுங்கள். முத்தமிழும் ஓடிவந்து உங்களை அணைத்துக் கொள்ளும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சொக்கன் :

ஆய்வு நூல்கள் :

கிழக்கு பதிப்பகம் :