மஹாயோகம்

ஆசிரியர்: ஆங்கில மூலம்: லக்ஷ்மண சர்மா,தமிழாக்கம்: அஹம்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 349
ISBN978-81-8288-267-6
Weight400 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘மஹாயோகம்' அல்லது பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசங்களின் அடிப்படையில் உபநிடத இலக்கியம் என்னும் இந்நூல், மகரிஷியின் உபதேசங்களை விரிவாகவும் ஆழமாகவும் எடுத்தியம்பும் ஓர் விரிவுரை மட்டுமன்று பண்டைய சுருதிகளான உபநிடதங்களின் முழு வேதாந்த சித்தாந்தத்தின் சுருக்கமான ஆனால் தெளிவான உரையும் ஆகும். உபநிடதங்களின் சாராம்சமும் மகரிஷியினது உபதேசங்களின் மூல அஸ்திவாரமும் ஆன்ம விசாரமேயாகும். இதனை அப்யசிப்பதில் ஓர் சாதகன் ஈடுபடுமுன் அதன் அடிப்படைத் தத்துவார்த்தத்தைத் தெளிவாகவும், வலிமையுடனும் புரிந்துகொள்வது இன்றியமையாதது மட்டுமன்றிப் பெரும் பயனையும் அளிக்க வல்லது. மகரிஷியின் உபதேசங்களின் முக்யமான பல அம்சங்களை விரிவாக விளக்கும் இந்நூலில் சாதகர்களுக்குக் கிட்டும் அத்தகைய தத்துவரீதியிலான அறிவு அத்துணைத் தெளிவுடனும் விரிவாகவும் வேறெங்கும் கிடைத்தற்கரிது.
இந்நூலாசிரியர் ஸ்ரீ கே. லக்ஷ்மண சர்மா (“யார்?”) இவ்விரிவுரையை வரையப் பெரும் தகுதி பெற்றவர் ஆவார். ஏனெனில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ பகவானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுடன், ஸ்ரீ பகவானது உபதேசங்களை பகவானது துணையுடனும் வழிகாட்டுதலிலும் ஆழ்ந்து கற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :