மவுனம் பேசுமா!

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 320
First EditionJun 2015
Weight400 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கூடல் நகராம் மதுரையின் மிகப் பெரிய திருமண மண்டபம், 'ராஜா முத்தையா மன்றம்'. நாளைய திருமணத்திற்கு இன்று அதிகாலையில் இருந்தே தயாராகிக் கொண்டிருந்தது. மன்றத் துக்கு வெளியே போட்டிருந்த பிரமாண்டமான பந்தலில் தென்னங் குருத்தோலையால் செய்த தோரணத்தை சுற்றிலும் கட்டிக் கொண்டிருந்தனர் சில ஆண்கள். இரவு முழுவதும் பந்தல் போட் டவர்கள் அங்கங்கே கிடைத்த இடத்தில் மதுவின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். தோரணம் கட்டியவர்கள் கீழே இருந்த மிச்சக் குப்பைகளை காலால் சேர்த்து, பிறகு விளக்குமாற்றால் கூட்டி கும்பலாய் சேர்த்தனர். இப்போது இடம் பளிச்சென்று ஆனது.
பந்தலுக்கு சற்றுத் தள்ளி நின்றிருந்த திறந்த வேனில் இருந்து மளிகைப் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தவர் களுக்கு பக்கத்து டீக்கடையில் இருந்து ஒரு பையன் டீ எடுத்து வந்து கொடுக்க, அவனிடமிருந்து டீ க்ளாஸ்களை வாங்கி அனை வருக்கும் கொடுத்தான் சத்யன்.
வேன் டிரைவருக்கு டீ எடுத்துப்போய் கொடுத்த சத்யன், "அண்ணே ஒரு பீடி இருக்காண்ணே? நைட்டெல்லாம் முழிச்சுக் கிடந்ததில் உடம்பு சில்லுன்னு இருக்கு, கொஞ்சம் சூடேத்துனா தான் இருக்குற வேலையைக் கவனிக்க முடியும்” பீடி கேட்டதற் கான விளக்கத்தையும் சேர்த்தே சொன்னான்.
சட்டை பாக்கெட்டில் இருந்து பீடிக் கட்டை எடுத்து அதில் ஒன்றை தன் உதட்டுக்கு கொடுத்துவிட்டு, இன்னொன்றை உருவி சத்யனிடம் நீட்டிய டிரைவர், “ஆமாய்யா நானே ட்ரிப் அடிக்கிறேன், இதோட முடிஞ்சுது, வீட்டுக்குப் போய் தூங்க வேண்டியது தான்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :