மலைபடுகடாம்

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹40.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மலைபடுகடாம் என்னும் பெயருடைய இந்நூல் கூத்தராற்றுப்படை என்றும் வழங்கப்படும். கூத்தரை நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்திய மையால் இப்பெயர் உண்டாயிற்று. மலையை யானையாக உருவகித்து அம்மலையில் எழும் ஓசைகளைக் கடாம் எனக் கூறியதால் மலைபடுகடாம் ஆயிற்று. இந்நூலில் மலையில் எழும் ஒலிகள் பலவும் எடுத்துக் கூறப்படுகின்றன. கூத்தராற்றுப்படை 583 அடிகளை உடைய ஆசிரியப் பாவான் இயன்றது. நூலை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார். இரணிய முட்டம் என்பது பாண்டிய நாட்டில் உள்ள யானைமலையைச் சார்ந்த பகுதியாகும்.
கூத்தரை நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப் படுத்துவதற்காக அவர் எடுத்துக் காட்டியுள்ள வழிகளில் கவனமாகப் பயணம் செய்ய வேண்டிய முறைகளும், நூலில் இயற்கை ஓவியமாக அமைந்துள்ளன. குறிஞ்சி, முல்லை , மருதம் ஆகிய நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையினையும் விருந்தோம்பல் சிறப்பையும் பழக்க வழக்கங்களையும் நூல் விரிவாகப் பேசுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :