மலரினும் மெல்லியவள் (2 பாகங்கள்)

ஆசிரியர்: ஜேபி

Category குடும்ப நாவல்கள்
FormatPaperback
Pages 720
ISBN978-1-64429-057-6
Weight750 grams
₹680.00 $29.25    You Save ₹34
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆளுமை, அகங்காரம், கோபம், ஆக்ரோஷம், உயர்வு மனப்பான்மை என்ற குணங்கள் கொண்ட இளம் தொழிலதிபர் ஒருவன் விதி வசத்தால் அமைதியான, ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் என்ற பந்தத்தில் தன்னோடு இணைத்து, வாழ்க்கையின் பாதையைச் சமபங்காகப் பகிர்ந்து வாழ நேர்ந்தால்? கனவிலும் நினையாத காதல் என்ற அழகான நுண்ணுணர்வால் ஈர்க்கப்பட்டு மனைவிக்காக உருகத் துவங்கியவனின் ஆழ் மனதில் அரும்பியிருந்த காதலை வெளிப்படுத்த இயலாது தவித்தவன், தன் மலரினும் மெல்லிய மனையாளிடம் தன் இதயத்தைத் திறந்தானா? விதி தங்களின் மணவாழ்க்கையைச் சூறாவளி போல் சுழற்றியடித்தாலும், காதலில் திளைத்த இரு உள்ளங்களும் காதலையே மருந்தாக மாற்றி, ஆழ் கடலின் அமைதி போல் தங்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க, விதி மீண்டும் தன் கோரக் கரங்களைக் கொண்டு அந்நியன் ஒருவனால், அழகிய இல்லறத்திற்குள் தங்களது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கும் தம்பதியினரின் வாழ்க்கைப் பாதையைச் சிதைக்க நினைத்தால்? ஆக்ரோஷமும், ஆவேசமும், சீற்றமும் ஒருங்கிணைந்த இளம் கணவனின் ருத்ரதாண்டவத்தில் கேடு நினைத்தவனின் தலை எழுத்து மாற்றி எழுதப்படுமா? எத்தகைய இரும்பு மனிதனின் இதயத்தையும் ஊடுருவி செல்லும் வலிமை வாய்ந்த காதலை அடிப்படையாகக் கொண்ட தன் வாழ்க்கையை அவன் காப்பாற்றுவானா?ஜேபி, உற்சாகமும் ஆர்வமுமிக்க ஒரு ஓவியர், எழுத்தாளர், மனைவி, மற்றும் இரு புதல்வர்களுக்கு அன்னை ... இவர் அமெரிக்காவில், தனது கணவர் ஜான், இரு அழகிய - மகன்கள் ஜெஃப் மற்றும் ஜோயலுடன் வசிக்கின்றார். இவருடைய ஓவியங்களாகட்டும், கதைகளாகட்டும், எளிய முறையில் வாழ்வின் எதார்தத்ததை அழகாக வெளிப்படுத்தும் படைப்புகளாக ஒளிருகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜேபி :

குடும்ப நாவல்கள் :

Notion Press :