மறுபடியும்

ஆசிரியர்: புவியரசு

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 124
ISBN81-234-0801-3
Weight400 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புரட்சிப்படைப்பாளர் கவிஞர் புவியரசு அவர்கள் 'மறுபடியும்' என்ற இந்நூலில் பதினேழு கட்டுரைகளைப் பதிவுசெய்துள்ளார். அவற்றில் பெரும்பான்மையான கட்டுரைகள் தரம்வாய்ந்த இதழ்களில் வெளிவந்தவை. இயற்கை, வரலாறு, நரகக்காட்சிகள், சமுதாயம், தியானம், இலக்கியம் ஆகிய பகுப்புகளை உள்ளடக்கிக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் உயர்வுள்ளல் என்ற ஒழுக்கத்தை உள்ளத்தில் பொறிக்கச் செய்வன. ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெற்றுள்ள முத்திரைச் செய்திகள் பின் வருமாறு தரப்படுகின்றன. பின்புலச் செய்திகளை நூலுக்குள் புகுந்து சேகரியுங்கள். 1. புனித பூமி : |
1 "வெள்ளையனின் நகரங்களில் அமைதியான இடமேதும் இல்லை. வசந்த காலத்தில் இலைகள் துளிர்ப்பதையோ ஒரு வண்டின் சிறகு சரசரப்பதையோ கேட்கக்கூடிய இடமேதும் இல்லை" என்று வெள்ளையரின் கொடூரத்தை இதயப் புழுக்கத்தோடு எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் புவியரசு. 2. சக்தி மனிதர்கள் : -
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் மின்சார சக்திவாய்ந்த ஒரு காந்தப்புலம் கண்ணுக்குத் தெரியாத போர்வைபோல் உள்ளது. நம் மன ஆற்றலை ஒருமுகப்படுத்திப் பிரயோகிக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள காந்தப்புலம் மேலும் சக்தியுடையதாகி, அது வெளிப் பொருள்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, கண்ணுக்குத் தெரியாத கைகளைப்போல் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. 3 கானகத்தின்பாடல் . பவர்ப ப்
மனிதக் குரலே இல்லாமல், ஒரு வாத்தியக் கருவிகூட இல்லாமல் இசைமேதை பெர்னிகிராஸ் உருவாக்கிய பிரபஞ்ச சங்கீதம் மேலை உலகில் ஒரு புயலைப்போல் வீசியது. அதில் பறவை, விலங்கு, பூச்சிகள் சங்கீதம் இசைக்க, கடல் திமிங்கலங்கள் பாடியுள்ளன. 4. ஜெய்ஹிந்த் செண்பகராமன் :
இந்தியா சுதந்திரம் பெற்றால் செண்பகராமனே குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று வாழ்த்துக்கூறினார் ஜெர்மன் சக்கரவர்த்தி கெய்சர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :