போரின் மறுபக்கம் அகதியின் அனுபவங்கள்
₹200.00 ₹180.00 (10% OFF)
பாலியல் வாழ்வின் மறுபக்கம்
₹90.00 ₹81.00 (10% OFF)
பெண் - இறைமையின் மறுபக்கம்
₹40.00
கம்பரின் மறுபக்கம்
₹140.00 ₹126.00 (10% OFF)
உயிரின் மறுபக்கம்
₹100.00 ₹90.00 (10% OFF)
மன்னிப்பின் மறுபக்கம்
₹80.00 ₹72.00 (10% OFF)

மறுபக்கம்

ஆசிரியர்: பொன்னீலன்

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatHard Bound
Pages 754
ISBN978-81-2341-732-5
Weight900 grams
₹600.00 ₹540.00    You Save ₹60
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாவல்
மறுபக்கம் நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும், தேவகிருபை என்பவர் கூறுவார்: "வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய், விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும். எதைத் தேடுவது, எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு, இந்நாவல்!
- எஸ்.பாலச்சந்திரன்
மறுபக்கம் நாவல் பல முகங்கள் கொண்டது. மன வாசிப்பு களுக்கான வாய்ப்புகள் கொண்டது. எதிரும் புதிருமான கருத்துகளால், கட்டமைக்கப்பட்டு, வாசக சுதந்திரத்திற்கான இடத்தையும் விட்டுச்செல்லும் பெரும்படைப்பு. சொல்லப்படாத வரலாறுகள், கட்டமைக்கப்பட்ட வரலாறுகளில் அமுக்கப்பட்டுக் கிடக்கும் மறைக்கப்பட்ட வரலாறுகள், நினைவு தடங்களிலிருந்து வன்மையாக அகற்றப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகள். வாய்மொழி வரலாறுகள், நாட்டார் கதைகள். நாட்டார் மரபுகள் என பழையாற்றின் வெள்ளம் போல குருத்தோலை மணத்தோடும். நுரைபொங்கும் கள்ளின் காரக்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல்,
- சி.சொக்கலிங்கம்

உங்கள் கருத்துக்களை பகிர :
பொன்னீலன் :

நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :