மரபுச் சுவை

ஆசிரியர்: க.காந்திமதி

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 64
First EditionFeb 2014
4th EditionOct 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமரபுக்குத் திரும்பும் நீண்ட பாதை சமையலறையில் துவங்குகிறது. சமையலறைகள், நம் முன்னோரின் மாபெரும் கண்டறிதல்களின் பதிவுக் கூடங்கள். நம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் வங்கிகள். நமது உடல் நலத்தை வளர்த்தெடுக்கும் ஆலயங்கள். மரபு உணவைச் சமைக்கும்போது, மரபு மீட்கப்படுகிறது. வேளாண் குடிகளின் வாழ்க்கை மேம்படுகிறது. உடல் நலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா உணவு வகை களும் நமது முன்னோரின் உருவாக்கங்கள். நான் அவற்றைத் தொகுத்திருக்கிறேன். சமகாலத்தில் பயன்பாட்டில் உள்ள சில உணவு முறைகளையும் மரபு தானியங்களைக் கொண்டு செய்யும் வகையில் சேர்த்துள்ளேன். அவ்வளவே. இன்றைய சூழலில், மரபு உணவுச் சமையலுக்கான சேர்க்கைப் பொருட்களைப் பெறுவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எண்ணெய் என்றால், செக்கில் ஆட்டப் பட்ட எண்ணெயைத்தான் மரபு உணவில் சேர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலைத் தயாரிப்புகள் மரபுக்குப் புறம்பானவை. பால் என்றால் அது கறவைப் பால் மட்டும் தான், பாக்கெட் பால் அல்ல. வெங்காயம் என்பது சின்ன வெங்காயத்தைத்தான் குறிக்கும், பல்லாரியை அல்ல. வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தாமல் வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு இவற்றைப் பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.காந்திமதி :

உடல்நலம், மருத்துவம் :

செம்மை வெளியீட்டகம் :