மரபுச் சுவை
ஆசிரியர்:
க.காந்திமதி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88?id=1707-6114-0937-5612
{1707-6114-0937-5612 [{புத்தகம் பற்றி மரபுக்குத் திரும்பும் நீண்ட பாதை சமையலறையில் துவங்குகிறது. சமையலறைகள், நம் முன்னோரின் மாபெரும் கண்டறிதல்களின் பதிவுக் கூடங்கள். நம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் வங்கிகள். நமது உடல் நலத்தை வளர்த்தெடுக்கும் ஆலயங்கள். மரபு உணவைச் சமைக்கும்போது, மரபு மீட்கப்படுகிறது. வேளாண் குடிகளின் வாழ்க்கை மேம்படுகிறது. உடல் நலம் உறுதி செய்யப்படுகிறது.} {அணிந்துரை இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா உணவு வகை களும் நமது முன்னோரின் உருவாக்கங்கள். நான் அவற்றைத் தொகுத்திருக்கிறேன். சமகாலத்தில் பயன்பாட்டில் உள்ள சில உணவு முறைகளையும் மரபு தானியங்களைக் கொண்டு செய்யும் வகையில் சேர்த்துள்ளேன். அவ்வளவே. இன்றைய சூழலில், மரபு உணவுச் சமையலுக்கான சேர்க்கைப் பொருட்களைப் பெறுவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எண்ணெய் என்றால், செக்கில் ஆட்டப் பட்ட எண்ணெயைத்தான் மரபு உணவில் சேர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலைத் தயாரிப்புகள் மரபுக்குப் புறம்பானவை. பால் என்றால் அது கறவைப் பால் மட்டும் தான், பாக்கெட் பால் அல்ல. வெங்காயம் என்பது சின்ன வெங்காயத்தைத்தான் குறிக்கும், பல்லாரியை அல்ல. வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தாமல் வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு இவற்றைப் பயன்படுத்தலாம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866