மரணமில்லா உணர்வுகள்

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 472
First EditionJan 2017
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹310.00 $13.5    You Save ₹15
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பனி தூவும் விடியலில் குயில் கூவும் அழகான காலை, பல தரப்பட்டப் பட்சிகள் இரை தேடிப் பறக்கும் இனிமையான காலைப் பொழுது. அத்தனை நேரம் அமைதியாக உறங்கிக் கிடந்த வானத்தை அசுரக் கூட்டம் வந்து அசைத்து விட்டது போல் மேகங்கள் சிதறியோட, செங்குருதி சிந்தியது போன்று பரபரவென பகலவன் வெளி வரும் இந்தக் காலைப் பொழுதிற்கு மட்டும் எத்தனை விதமான முன்னறிவிப்புகள்.!!
தண்ணீர் குடம் சுமந்து இடை அசைய குடத்து நீர் தழும்ப கால் சலங்கை குலுங்க தழுக்கி நடக்கும் பெண்கள், கழுத்து மணியசைந்து ஒசையெழுப்பக் கன்றினைத் தேடும் காராம்பசுவின் “ம்மா.” என்ற அழைப்பு, கால் குளம்பு சப்தமிட காலை உழவுக்குச் செல்லும் காளைகளின் குளம்படி ஓசை, கையில் சாட்டைக் கொம்புடன் அக்காளைகளை விரட்டிச் செல்லும் உழவனின் "ட்டுர் ட்டுர் என்ற குரலோசை, தெருக்கோடி விநாயகரின் தலையில் ஒரு குடத்து நீரைக் கொட்டி அவசரமாக மந்திரத்தைச் சொல்லி விட்டு அடுத்தக் கோயிலை நோக்கி ஓடும் கற்றைக் குடுமி வைத்த ஒற்றைப் பிராமணனின் உதடுகள் ஓயாமல் கூறும் மந்திர சொற்களின் ஒலி, அந்த ஒற்றைப் பிராமணன் முன்பு சென்று விடக் கூடாதென்று கவனமாக ஒதுங்கிச் செல்லும் ஊர்க்காரர்கள், பால்காரரின் சைக்கிள் மணியோசை, பால் வாங்க வரும் பெண்களின் கை வளையோசை என விதவிதமான ஒலிகள் ஒலித்து விடிந்து விட்டதை அடையாளம் கூறின.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :