மரங்கொத்தியின் இசை
ஆசிரியர்:
கே.பாலமுருகன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88?id=1334-2058-9766-3224
{1334-2058-9766-3224 [{புத்தகம்பற்றி சினிமா பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி இந்த | நாற்றாண்டின் மாபெரும் கனவு. நிஜத்தையும் நிஜத்திற்கு அப்பாற்பட்ட கற்பனையையும் கலந்துகொடுக்கும் போதை. சினிமா ஒரு சமூகத்தை மறுகண்டுபிடிப்பு செய்யக்கூடும்; சினிமா ஒரு சமூகத்தின் இழப்புகளுக்கு சர்வதேச கவனத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்; சினிமா அடித்தட்டு கலைஞர்களை வாழவைக்கும்; சினிமா தன் நிலம் சார்ந்த அடையாளங்களை மறுசீரமைப்பு செய்யும்; சினிமா சமூகக் குற்றங்களை அம்பலப்படுத்தும்; சினிமா நடப்பவற்றை அசலாக வெளிக்கொணரும்; சினிமா மனித எழுச்சியை நோக்கி பாயக்கூடிய ஆற்றலை விதைக்கும். இவற்றுக்கு அப்பாற்பட்டு சினிமா சந்தையாகிவிட்டது; சினிமா பண்டமாற்று கலாச்சாரத்தை வளர்த்துவிட்டிருக்கிறது; சினிமா முதலாளிய நிறுவனங்களின் தத்துப்பிள்ளையாகிவிட்டது; சினிமா அபத்தங்களின் இருப்பிடமானது என்பதெல்லாம் இதே நூற்றாண்டில் சினிமா எனும் கலைக்குக் கிடைத்த சாபங்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866