மயில் விழி மான்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category கதைகள்
Formatpaperpack
Pages 128
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் செல்வது அந்த வண்டிக்குப் பழக்கமாயிருந்தது. ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது மைல் வேகத்துக்கு;க குறைவாகப் போக முடியவில்லை. திடீரென்று சாலையின் நட்ட நடுவில் ஒருவர் வழிமறித்து நின்று வண்டியை நிறுத்தும்படி கையைக் காட்டினார். ஆள்மேலே ஓட்டட்டுமா? ஒதுக்கி ஓட்டட்டுமா?" என்று டிரைவர் கேட்டார். “வேண்டாம் வேண்டாம்! சற்று நிறுத்தித் தான் பார்க்கலாமே! ஏதாவது அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய காரியமாயிருக்கலாம்!'' என்றேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்தச் சொல்லி சிகரெட்டுப் பற்ற வைக்க நெருப்புப் பெட்டி இருக்கிறதா என்று கேட்பார்கள். இந்தப் பக்கத்து வழக்கம் அது! ” என்று சொல்லிக் கொண்டே டிரைவர் வண்டியை நிறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :