மன்மதக்கலை

ஆசிரியர்: டாக்டர் டி நாராயண ரெட்டி

Category இல்லற இன்பம்
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaperback
Pages 136
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உடல்நலம் மட்டுமல்ல, மனநலமும் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமையும். இவை இரண்டும் சிறப்பாக அமைய பாலியல் வாழ்க்கையும் அவனுக்கு சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். அத்தகைய பாலியல் குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முறையான பாலியல் கல்வி அவசியம்.
திருமணமான தம்பதிகளுக்கும், திருமணம் செய்துகொள்ளப் போகும் இளைஞர்களுக்கும் பாலியல் கல்வி புத்தகங்கள் அவசியம்.
தமிழில் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்றொரு முதுமொழி உண்டு. அதன் எதிர்ப்பதமாகவே இந்த நூல் ‘சொன்னால்தான் தெரியும் மன்மதக்கலை’ என்ற தலைப்போடு வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற செக்ஸாலஜி நிபுணர் டாக்டர் டி.நாராயண ரெட்டி எழுதியுள்ளார். செக்ஸ் கல்விக்கான முதல் தடையான தயக்கத்தைக் களைவதும், செக்ஸ் குறித்த தேவையற்ற மூட நம்பிக்கைகளையும் பயங்களையும் நீக்குவதும்தான் இந்த நூலின் முதல் நோக்கம்.
‘இதுபோன்ற புத்தகங்களைப் படித்தால் கெட்டுப்போவார்கள்’ என்று சிலர் சொல்வார்கள். அறியாமைதான் ஒரு மனிதனைக் கெடுக்குமே தவிர, எதையும் முறையாகக் ற்றுக்கொள்பவர்கள் என்றும் தவறான வழிக்குச் செல்வதில்லை. காமம் ஒரு கலை. அதை முறையாகப் படிப்பதும் கற்றுக்கொள்வதும் அவசியம்.
‘குங்குமம் டாக்டர்’ இதழில் வெளியான சூப்பர் ஹிட் தொடரின் நூல் வடிவம் இது!.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் டி நாராயண ரெட்டி :

இல்லற இன்பம் :

சூரியன் பதிப்பகம் :