மனித வாழ்வில் மரங்கள்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மீண்டும் காடுகளை வளர்ப்பதன் மூலமும், காடுகளை உருவாக்குவதன் மூலமும் கார்பன்டை ஆக்ஸைடை சுத்தப்படுத்தி, பூமி வெப்பமடைதலைத் தடுக்கலாம். இன்றைக்கு முதல் உலக நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடைக் குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
உலக வங்கி பல நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து மரங்களை வளர்க்கச் சொல்கிறது. குறிப்பாக பாவ்லோமியா (Pawlomia) மரத்தை நடச் சொல்கிறது. இம் மரம் அதிகப்படியான கார்பனை உறிஞ்சுகிறது. மெக்சிகோவில் பாவ்லோமியா மரங்கள் நடப்பட்டுள்ளது. இதன் மர நிழலில் காபி பயிரிடப்படுகிறது. இதுவும் உதவிகரமாக உள்ளது.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பது நமது கடமை. நமது குழந்தைகளுக்கு நல்ல காற்று கிடைக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். மாணவர்களுக்கு மரங்களின் பயனை எடுத்துக் கூறவேண்டும். வாழ்நாள் முழுக்க நன்மை செய்து வரும் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்திட வேண்டும்.
2009ம் ஆண்டில் 700 கோடி மரங்களை நடுவது என ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு கோடி மரங்கள் இயக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாமும் ஈடுபடுவோம். ஆளுக்கு ஒரு மரம் நடுவோம். அதனைப் பேணி பாதுகாப்போம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :