மனதோடு மான்சியின் நினைவுகள்

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
FormatPaperback
Pages 280
Weight350 grams
₹185.00 $8    You Save ₹9
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காதலனுடன் முதல் முதலாய் முதலிரவில் ஈடுபட்டுவிட்டு வந்த காதலியின் முகம் போல் கீழ் வானம் சிவப்பைப் பூசிக் கொண்டிருக்க, செந்நிற சூரியன் பூமிக்கு தங்கச்சாயம் பூசும் காலைப் பொழுது! அழகியொருத்தி தன் கூந்தலுக்குப் போட்ட அகில் புகை எல்லாம் விண்ணில் மேகமாகித் திரண்டது போல, திட்டுத் திட்டாய் கிடந்த மேகக் கூட்டத்தைத் தனது பெருங் கரங்கள் கொண்டு விலக்கியபடி சூரியன் மேலெழுந்து கொண் டிருந்தான்.
ஜோதி மயமான பூமியில் இன்னும் தீராத ஜாதி மயக்கம் போல் சுட வரும் சூரியனுக்கும் நான் சாமரம் வீசுவேன் என்று மதிமயங்கி மயக்கத்துடன் தலையசைக்கும் சாலையோரப் பூ மரங்கள்! தாயின் மடி தேடி ஓடும் கன்றுகளின் குரல்! குஞ்சு களுக்கு இரை தேடிப் பறக்கும் பறவைகளின் ஒலி! சூரியனால் எழுப்ப முடியாத மனிதனை நான் கூவியாவது எழுப்பி விடு கிறேன் என்ற சவாலுடன் எங்கோ கூவும் சேவலின் சப்தம்! அழகி அவிழ்த்துப் போட்ட வெந்நிற ஆடை போல் வளைந்து நெளிந்து ஒடும் காவிரி! மேட்டூரில் மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் வீரியம் குறையாமல் புரண்டோடும் காவிரியின் ஈரத் தாலாட்டு! இவை அத்தனையும் சேர்ந்து மொத்தமாக விடியாமல் ஆங்காங்கே துண்டு துண்டாய் விடியும் இனிய காலைப் பொழுது!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :