மனதை கையாளும் தந்திரம்

ஆசிரியர்: சத்குரு

Category பொது நூல்கள்
Publication ஈஷா அறக்கட்டளை
Format Paperback
Pages 216
ISBN978-81-87910-76-3
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“மனதை கையாளும் தந்திரம்" என்னும் இந்தப் புத்தகத்தில், சத்குரு, மனதின் புதிரை அவிழ்த்து மனதின் சாத்தியங்களையும் சாக்கடைகளையும் விளக்குவதோடு மனதில் அமைதியையும், ஆனந்தத்தையும் அடைவதற்கான வழிகளையும் விளக்குகிறார். இப்புத்தகம் சத்குருவின் உரையாடல்கள் மட்டுமல்லாது, பலதரப்பட்ட மக்களின் சுவாரஸ்ய கேள்விகளுக்கான சத்குருவின் பதில்களும் நிறைந்த தொகுப்பாக உள்ளது. குழப்பம் நிறைந்த, ஆழம் நிறைந்த, வேடிக்கையான பல கேள்விகள் கேட்கப்படுகின்றன, சத்குருவின் பதிலோ தெளிவும் பன்முகத்தன்மையும் கொண்டதாய் அமைந்து மனதின் சூட்சுமத்தை உணர்த்துகிறது.
இப்புத்தகம் முழுக்க சத்குருவிற்கே உரித்தான நையாண்டியும் நகைச்சுவையும் இழையோடுகின்றன. மனதை திறம்படக் கையாளும் தந்திரத்தையும், தேவையற்ற எண்ணங்களையும் தவறான புரிதல்களையும் களைந்து தூய எண்ணங்கள் கொண்ட மனநிலையை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் இதில் எடுத்துரைக்கும் சத்குரு மனம் ஆடும் போலியான நாடகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கு ஒழுக்கநெறியையோ அல்லது வேலைக்கு உதவாத அறிவுரைகளையோ கையாளவில்லை. தியானம் என்பது மனதைக் கையாள்வதற்கான ஒன்றாக மட்டுமில்லாமல், மனம் தாண்டிய பரிமாணத்தை உணர்வதற்கான ஒப்பற்ற சாதனம் என்று கூறும் சத்குரு, யோகாவின் மொத்த சாரமும், மனதை திறம்படக் கையாண்டு அதை நல்வாழ்விற்கும் முக்திக்குமான கருவியாக பயன்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்றும் கூறுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

பொது நூல்கள் :

ஈஷா அறக்கட்டளை :