மணி ஒலிக்கிறது

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category பயணக்கட்டுரைகள்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaperback
Pages 56
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு குண்டினை விடவும் பல்லாயிரம் மடங்கு பெரிய அணுகுண்டுகள் இன்று அமெரிக்கா, ரஷ்யாவிடம் உள்ளன. இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இவற்றில் யார் அதை எப்போது பிரயோகம் செய்வார்கள் எனத் தெரியாத பயத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஹிரோஷிமாவின் பாதிப்பு ஐந்து தலைமுறைகளாகத் தொடர்ந்திருக்கிறது. இன்னொரு அணுகுண்டு வீச்சு நடந்தால் அதன் பாதிப்பை இந்த உலகம் தாங்கமுடியாது என்பதே உண்மை .

என்ன உதவி கேட்டாலும் ஒடிவந்து செய்கிறார்கள்.
பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது. அடுத்தவரை இடிக்காமல்தள்ளாமல் நடப்பது. வரிசையில் அமைதியாகக் காத்து நிற்பது. இனிமையாகப் பேசுவது, பரஸ்பர மரியாதை. அன்புகாட்டல். தேசப் பற்று. மொழிப்பற்று என அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எதையும் திட்டமிட்டு முறையாககலையுணர்ச்சியுடன் செய்கிறார்கள். எரிமலையின் அடியில் வாழ்கின்ற போதும் அவர்களிடம் பயமேயில்லை. சுனாமியும் நிலநடுக்கமும் அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பைத்தான் அதிகரித்திருக்கிறது. ஜப்பானிய புத்தகங்கள் நமது புத்தகங்களுக்கு நேர் மாறானது. நமது கடைசிப்பக்கம் தான் அவர்களின் முதல் பக்கம். கடைசியில் இருந்து முதல் நோக்கி படித்துக் கொண்டு வருவார்கள். ஆகவே அவர்களின் பக்க எண்வரிசையும் அப்படியே உருவாக்கபட்டிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

பயணக்கட்டுரைகள் :

பூவுலகின் நண்பர்கள் :