மணிமேகலை காட்டும் மனித வாழ்வு

ஆசிரியர்: சாமி சிதம்பரனார்

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 200
ISBN978-93-88061-46-9
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மணிமேகலை கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே, தமிழ் நாட்டின் சமுதாய-அரசியல் நிலைமைகள் எப்படியிருந்தன என்பதை அறிவதற்கு உதவும் நூலாகும்.மணிமேகலை நூலின் கருத்துக்கள், கொள்கைகள் அதில் கூறப்படும் புத்தமத தத்துவங்கள், தமிழ்நாட்டு நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் கொள்கை போன்ற செய்திகள், இந்நூல் தனித்தனித் தலைப்பின் கீழ் ஆராயப்பட்டிருக்கின்றன. மணிமேகலை முழுக்க முழுக்கப் புத்தமதப் பிரச்சாரம் செய்யும் நூல்தான். ஆயினும் இதில் இலக்கியச் சுவையும் இணைந்து கிடக்கின்றது. இதனாலேயே இது இலக்கியமாகவும் போற்றப்படுகின்றது. 'இலக்கியச் சுவை' பகுதியிலே இதைக் காணலாம்.
மணிமேகலை புத்தமதத்தைப் போதிக்கும் நூலாயினும், மனித சமூக நல்வாழிவைக் குறியாகக் கொண்ட ஒரு நூல் என்றே கூறலாம். இத்தகைய சிறந்த நூலின் கொள்கையைத் தமிழ் மக்கள் அறியவேண்டியது அவசியமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :