மணல் கடிகை

ஆசிரியர்: எம். கோபாலகிருஷ்ணன்

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatHard Bound
Pages 544
ISBN978-81-8764-153-7
Weight750 grams
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தம்பிக்கையுடன், அகத்திலிருந்து கிகாக்கும் உறவுகளின் உன்ம (முகங்களையும் பேரடிச் சிக்கல்களையும் மிகத்தீவிரமாகவும் நுட்பமாகவும் உணர்த்தும் தமிழ்ப் புதினம் இதுவே,

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாகரிகம் என்ற பாதையில் புறத்தே மனிதனின் சமூக, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குப் பின்னும் அகம் தீர்க்கவியலாத புதிர்களுடன் இன்னும் அப்படியே இருந்து வருகிறது, என்றும் அது அப்படியேதான் இருக்கும். ஒவ்வொரு மனமும் அடி காணா ஆழம். மனத்தின் விகல்பங்களுக்கு நிகராக விடையற்ற கேள்விகளுடன் பிணைந்து நிற்பவை மனித உறவுகள். மனிதன் இது. வரையிலான தன் அனுபவங்களைக் கொண்டும் உள்ளுணர்வின் எகத்திலும் இப்புதிர்களைப் புரிந்து கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறான். இத்தகைய முயற்சிகளில் முன்நிற்பது இலக்கியம்தான். 'அம்மன் நெசவு' நாவலைத் தொடர்ந்து வெளிவரும் என்னுடைய இந்த நாவலும் இம்முயற்சியின் ஒரு பகுதியே. தொழில் வளர்ச்சியும் கலாச்சார வளர்ச்சியும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கிற திருப்பூர் நகரத்தை இந்த நாவல் களமாக மட்டுமே கொண்டுள்ளது. மற்றபடி இது திருப்பூரைப் பற்றிய நாவல் அல்ல; மனிதனைப் பற்றியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம். கோபாலகிருஷ்ணன் :

நாவல்கள் :

தமிழினி :