மங்காத தமிழ்

ஆசிரியர்: ஆ.அரிமாப்பாமகன்

Category ஆய்வு நூல்கள்
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 408
ISBN978-81-955534-0-2
Weight500 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'மொழியியல், வேர்ச்சொல் ஆய்வு - இரண்டும் தமிழ் மக்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டும்; என் கருத்துகள் தமிழறிஞர்களிடம் சேரவேண்டும் என்பதை விடத் தமிழறிந்தவர் களிடம் சேர வேண்டும்!" - இது என் விருப்பம். மிகவும் எளிய தமிழில் மக்களுக்குப் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்று நினைத்து எழுதினேன்; அது நிறைவேறியுள்ளதா என்பதைப் படிப்போரே கூற வேண்டும்!
'இயம்பும் எம்மொழி' (2019), 'இனிமைத் தமிழ்மொழி எமது' (2020) என்னும் இரண்டு நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் 'மங்காத தமிழ்' என்னும் இந்த நூலும் சொல்லாய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது.
முகநூலில் பதிவிடும்போது நண்பர்கள் பலரும் வரவேற்றுத் தம் கருத்துகளைப் பதிவுசெய்தனர். அவர்கள் தந்த ஊக்கம் தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தது.
சிறந்த முறையில் அணிந்துரை நல்கிய புலவர் திரு சி. அறிவுறுவோன் அவர்களுக்கும், சிறப்புறப் பதிப்பித்துக் கொணரும் யாழிசைப் பதிப்பகர் புலவர் தா. இளங்குமரன் அவர்களுக்கும் என் நன்றி.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
'மங்காத தமிழ்' என்று சங்கே முழங்கு!"

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.அரிமாப்பாமகன் :

ஆய்வு நூல்கள் :

யாழிசைப் பதிப்பகம் :