மக்கள் வாழ்வும் ஒழுக்கமும்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 120
ISBN978-93-80218-62-5
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் என்னும் இந்நூல் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்களின் ஒழுகலாறுகளைத் தரம்பிரித்து விளக்க முற்படுகிறது. செய்திகள் அனைத்தும் தொல்காப்பிய நூற்பாக்களை அடியொற்றியதாகவே அமைந் துள்ளன. முழுமையான பிரதிபலிப்பாக இல்லை எனினும், முக்கியமான, தேவையான செய்திகள் தெளிவாக உரைக்கப் பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு எனலாம். அக்கால திருமணச் சடங்குமுறைகள், காதல் வாழ்க்கை , கற்பு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என்பன இன்றைய சூழலோடு பொருந்தி அமையும் சிறப்பு உரைக்கப்படுகிறது. வாழ்க்கையின் நுட்பங்கள் உணர்ந்து எழுதப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் காலத்திலிருந்த சாதியமைப்பு முறைகள், அவர்களுக்கமைந்த தொழில் வகைகள் ஆகியவற்றைச் சுட்டி, பிறப்பினால் சாதிப் பகுப்பு ஏற்படவில்லை என்பதனை எடுத்துக் காட்டுகிறது. நிலமுள்ளோர், நிலமற்றோர் எனவும் நிலத்தலைவர்களைச் சார்ந்தே புலவர்கள் வாழ்க்கை முறை அமைந்தது எனக் காட்டுதல் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :