மகிழ்ச்சி தரும் மணவாழ்க்கை

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category இல்லற இன்பம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 120
Weight100 grams
₹60.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காலகாலமாகவே ஆணினம் ஒரு கருத்தைத் தன்னுள் அழுந்தப் பதித்துக் கொண்டிருக்கிறது. அது 'மணவாழ்க்கை என்பது உடல் சார்ந்த திருப்திக்கும், சந்ததி விருத்திக்குமான ஏற்பாடு' என்கிற கருத்து. சமீபகாலத்தில், 'மணவாழ்க்கையை ஒரு சாதனமாய்க் கொண்டு, தான் வளர்ச்சியடையவும் பல சவுகரியங்களைப் பெறவும் முடியும்' என்கிற எண்ணம் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பெண் மனம், 'அந்த நாளும் வந்திடாதோ' (மணவாழ்வில் காலடி வைக்கும் நாள்) என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறது. தன்னுடைய நலன்களை, சொந்த விருப்பங்களை விட்டுக் கொடுத்தும் அந்த வாழ்க்கையைப் பெற்றுவிடத் துடிக்கிறது.
ஆண், பெண் இருவரிடமும் இருக்கிறது ஆயிரம் கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள்! அத்தனையும் நிறைவேறிவிடுகிறதா அவர்களுடைய மணவாழ்க்கையில்? அவர்கள் எல்லோருமே தாங்கள் விரும்பியிருந்த ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அடைந்து விட்டிருக்கிறார்களா? நிறைய பேர் மன அமைதியின்றி ஏமாற்றத்தில் விரக்தியில் விழுந்து இடறுவதே உண்மை .

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

இல்லற இன்பம் :

சங்கர் பதிப்பகம் :