மகாபாரதம் அறத்தின் குரல்
ஆசிரியர்:
நா.பார்த்தசாரதி
விலை ரூ.400
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+?id=1731-1653-1987-3784
{1731-1653-1987-3784 [{புத்தகம் பற்றி மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப்போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு மன அமைதியோடு கீழே இறங்கி வருவோம். இப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவதுபோல் முழங்கும் எண்ணம் யாது? தர்மத்துக்குத்தான் வெற்றி!சத்தியத்துக்குத்தான் வெற்றி! நேர்மைக்குத்தான் வெற்றி! நியாயத்துக்குத்தான் வெற்றி!
<br/> இந்த எண்ணம்தான் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல் முழங்கு கிறது. முழங்கிக்கொண்டே இருக்கட்டும். 'இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா' என்று யாரோ கேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! அப்படிக் கேட்பவர்களுக்கு நாம் இந்த பதிலைச் சொல்லுவோம் நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாததில் எதுவும் இல்லை. நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறு வது எதுவோ அது நல்லது! அதை நாமும் நம்புவோம்நம்பி வாழ்வோம்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866