மகாபாரதம் வண்ணப் படக்கதை பகுதி -2

ஆசிரியர்: சுவாமி ராகவேசானந்தர்

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaper Back
Pages 72
ISBN978-81-7120-407-4
Weight250 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மகாபாரதம் வண்ணப் படக்கதை, இரண்டாம் பகுதியைத் தற்போது வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பாண்டவர்கள் மீது கௌரவர்கள் கொண்ட பொறாமை, அதன் விளைவாகச் செய்த சூழ்ச்சிகள், அறவழியில் நின்ற பாண்டவர்கள் இறையருளால் அவற்றை முறியடித்தது போன்ற விவரங்களை முதற்பகுதியில் படித்து மகிழ்ந்திருப்பீர்கள். மாபெரும் குருக்ஷேத்திரப் போருக்கு வித்திட்ட சில முக்கிய சம்பவங்களை இந்தப் பகுதியில் படிக்க இருக்கிறோம். விதியின் விளையாட்டு அறியொணாதது. நல்லவர்கள்கூட அதன் பிடியிலிருந்து எளிதாகத் தப்ப முடிவதில்லை. அறம், அன்பு போன்ற பண்புகள்கூடத் தோற்றுவிடுமோ, என்று நாம் திகைத்து நிற்கின்ற அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்து விடுகின்றன. ஆனால் அறமே வெல்லும் என்பதனை வியாசர் ஒவ்வோர் இடத்திலும் வற்புறுத்தாமல் விடுவதில்லை. பாத்திரப் படைப்பிலும் வியாசர் தன்னிகரற்று விளங்குகிறார். ஒவ்வொரு பாத்திரத்தின் மூலமும் அவர் மனித மனத்தின் ஒவ்வொரு பண்புகளை மிகச் சிறப்பாக விளக்குகிறார். மகாபாரதம் ஒரு மன ஆராய்ச்சி நூல் என்று கூறுவது மிகையாகாது. நூலைத் தொடர்வோம்.....


உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி ராகவேசானந்தர் :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :