மகரந்தப் பூக்கள்...!

ஆசிரியர்: இன்பா அலோசியஸ்

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaper back
Pages 204
Weight200 grams
₹180.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தன் காதலனது ஆத்மாவுக்குச் சந்தோஷம் அளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்துவிட்டோம் எனப் பூரித்துப் போனாள்.
மகளை நீலனோடு அனுப்பியிருந்தால், உயிருடன் இருந்திருப்பாளே என்ற ஏக்கம் அவளைப் பெற்றோரை அரித்தது. ஆனால் காலம் கடந்த ஞானத்தால் யாருக்கு என்ன பயன் எனத் தங்களையே தேற்றிக்கொள்ள முயன்றார்கள். அதே நேரம்... நீலன் துவங்கி வைத்த ஒவ்வொரு நல்ல விஷயமும், அங்கே இருந்த ஒவ்வொரு மக்களின் மனத்தில் உறைந்து போய்க் கிடந்தது. ஊமத்தை சொன்ன ஒற்றைப் பொய், நீலனை அவர்கள் மனத்தில் நல்லவனாகவே நிலைத்திருக்கச் செய்தது. இன்னும் அவர்களை முன்னேற்றத் தங்கள் அதிகாரிகள் மூலமாக, அமைப்பின் மூலமாகத் தன்னால் முடிந்தவற்றை நீலன் இன்னுமே செய்வான். கூடவே, பொற்சுவையை முடிந்தால் படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தான். காலமும் நேரமும் கூடி வந்தால், அனைத்தும் நல்லபடியாகவே நடந்தேறும். அதற்கு அறிகுறியாக, பொற்சுவை, நீலனின் விருப்பத்துக்கு ஏற்ப, தேவதையே அவனுக்கு மகளாக வந்து பிறந்தாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இன்பா அலோசியஸ் :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :