போலாகர் டுவிஸ்டுவின் பாரபாஸ்
ஆசிரியர்:
தமிழில் : க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?id=2+0360
{2 0360 [{புத்தகம் பற்றி அங்கு பாரபாஸ்தான் தனியாக உயிருடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தான். இன்னமும் உயிர் இருந்தது இவனுக்கு. இவன் ஆயுள்பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து அதனிடம் 'பேசுகிறமாதிரி சொன்னான்.

"என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்” 'பிறகு பாரபாஸ் இறந்து விட்டான்.

நாவல் இறுதியில்

} {ஆசிரியர் உரை சிலுவையில் அறையப்பட்டு அவர்கள் அங்கு எப்படித் தொங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சுற்றிலும் நின்றவர்கள் யார் யார் என்பதும் எல்லோருக்குமே தெரியும். தாயார் மேரி, மேரி மாக்டலென், வெரோனிகா, சிலுவையைத் தாங்கி வந்த ஸைரீனைச் சேர்ந்த ஸைமன் மற்றும் போர்வையெடுத்துப் போர்த்திவிட்ட அரிமிதியாவைச் சேர்ந்த ஜோஸப் ஆகியவர்கள் சுற்றிலும் நின்றார்கள். ஆனால் சரிவிலே சற்றுத் தள்ளி, ஒருபுறமாக ஒதுங்கி நின்றான் ஒருவன். அவனால் சிலுவையில் அறையப்பட்டிருந்தவரிடமிருந்து கண்களைத் திருப்பவே முடியவில்லை. நடுச் சிலுவையில் நடந்த அந்த மரண அவஸ்தையை ஆரம்பம் முதல் கடைசி வரையில் ஒரு துளிகூட விடாமல் பார்த்துக் கொண்டு நின்றான் பாரபாஸ். இவனைப் பற்றித்தான் இந்த நூல்.

இவனுக்கு வயது முப்பதிருக்கும். கட்டுமஸ்தான உடல், வெளிரிய மேனி, சிவந்த தாடி, கருத்த மயிர். புருவ மயிரும் கருப்பாகத் தான் இருந்தது. கண்கள் குழிவிழுந்து ஆழ்ந்து கிடந்தன. எதிலிருந்தோ, பயந்து ஒளிந்து கொள்ள விரும்புகிறவைகள் போல அவை எங்கேயோ போய் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒரு கண்ணுக்குக் கீழே இருந்த ஆழமான வடு தாடியில் சென்று மறைந்தது. ஆனால் ஒரு ஆசாமியின் உருவத்துக்கும் தோற்றத்துக்கும் அப்படி முக்கியத்துவம் எதுவும் உண்டா என்ன?

கவர்னரின் அரண்மனை முதல், தூரத்தில் அந்தக் கும்பலைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், தெருத் தெருவாகத் தொடர்ந்து, வந்திருந்தான். ஓய்ந்துபோன ராபி, சிலுவையைத் தூக்க மாட்டாமல் தெருவிலே சாய்ந்தபோது தூரத்திலேயே நின்றான். ஸைமனைப் பிடித்து அவனை அந்தச் சிலுவையைத் தூக்கிவரக் கட்டாயப்படுத்தினார்கள். அப்படிக் கும்பல் ஒன்றும் அதிகம் இல்லை . இருந்த கும்பலிலும் பெரும் பகுதி ரோமாபுரியின் சேனை வீரர்கள்தான், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெண்களும், தெருவிலேயே வசிக்கும் குழந்தைகளையும் தவிர கும்பலில் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்தத் தெருவோடு போனாலும், சிலுவை தூக்கும் குற்றவாளியை வேடிக்கை பார்க்கப் பத்துக் குழந்தைகளாவது வரும். அதுவும் தங்கள் தெருவைத் தாண்டி வராது. தினசரி வியைளாட்டுகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட பொழுது.

} {பதிப்புரை சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றார் பாரதி. க.நா.சு. எட்டுத்திக்கும் சென்றார்; ஏராளமான இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்தார். சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள் என்று மொழியாக்கம் செய்து நம் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். அவருக்கு நம் மொழி கடன்பட்டுள்ளது. என்பதா? அவர் தம் கடமையைச் செய்தார் என்பதா? நம் கடன் பாராட்டிப் போற்றுவதாகும்.

இதில் 5 நாவலாசிரியர்களின் ஆறு மொழிபெயர்ப்பு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை உலக இலக்கிய வரிசையில் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

க.நா.சு. அவர்கள் ஒரு பன்முக ஆற்றல் செறிந்த படைப்பாளி. சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்பதும் ) எல்லாவற்றுக்கும் மேலாக பரந்து பட்ட வாசிப்பாளர் என்பதும் அவரைத் தனிப்பெரும் தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராக சாட்சியம் சொல்லிக் கொண்டு வருகின்றன. - க.நா.சு.வின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் காவ்யா இவ்வாண்டு அவரது சிறுகதைகளையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் இரு தொகுதிகளாக வெளியிடுகிறோம். வழக்கம் போல வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.

இதன் பிரதிகளில் பிழை பார்த்து உதவிய க.நா.சு. வின் மருமகனும் நடிப்புலகில் (சினிமா நாடகம்) தனி முத்திரைப் பதித்து வருபவருமான திரு.பாரதமணி அவர்களுக்கும் வாங்கி வாசிக்கப் போகும் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் நன்றி.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866