போர் தொடர்கிறது

ஆசிரியர்: அகஸ்டோ ருவா பஸ்டோஸ்

Category மொழிபெயர்ப்பு
Publication சிந்தன் புக்ஸ்
FormatPaper Back
Pages N/A
₹350.00 ₹297.50    You Save ₹52
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகப் புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க இலக்கிய மேதைகளான கார்லோஸ் ஃபுயண்டஸ், யோஸே லெஸாமா லிமா, பாப்லோ நெரூதா போன்றோரின் சமகாலத்தவரான அகஸ்டோ ருவா பஸ்டோஸ் (பராகுவே) எழுதிய - Hijo de Hombre (Son of Man) என்னும் தலை சிறந்த நாவலை, எஸ். பாலச்சந்திரன் அவர்களின் மொழிபெயற்பில்...

அகஸ்டோ ருவா பஸ்டோஸ் தனது நாட்டின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து, நாட்டுப்புற மக்களின் வழக்காறுகளை, பூர்வீக அமெரிக்க இந்தியர்களின் ‘குவாரானி’ மொழியின் ஜீவத்துடிதுடிப்போடு குழைத்து, மிகச் சிறந்த நாவல்களை உலகிற்கு அளித்தவர். பழங்குடி மக்களின் போர்க்குணத்தை அற்புதமாகச் சித்திரிக்கும் போர் தொடர்கிறது என்னும் இந்நாவலில் யதார்த்தவாதத்தின் சாத்தியமான எல்லைகள் அனைத்தையும் தொட்டவர், அவற்றைக் கடந்து செல்லவும் முயன்றவர். இந்நாவலைத் தவிர Thunder in the Leaves, I the Supreme, The Prosecutor உள்ளிட்ட பல நாவல்களையும் எழுதியவர். மாஜிக்கல் ரியலிசம் என்னும் இலக்கிய வடிவத்தை வெற்றிகரமாக கையாண்ட முன்னோடி நாவலாசிரியர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மொழிபெயர்ப்பு :

சிந்தன் புக்ஸ் :