போர் உலா
ஆசிரியர்:
மலரவன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE?id=1739-4627-7302-7252
{1739-4627-7302-7252 [{புத்தகம்பற்றி விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகள்தான் இந்நூல். 1992ல் கேப்டன் மலரவன் “பலாலி சிங்களப் படைத்தளத்தின் கிழக்கு பகுதி மீது", நடத்தப்பட்ட தாக்குதலில் "வீரமரணமடைந்தார்.'' அவருடைய மரணத்திற்கு பின்பு அவரது ''உடைப் பையிலிருந்து'' எடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி 1993ல் “போர் உலா" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. "போர் உலா” என்ற தமிழ் இலக்கிய மரபின் நிழல் படிந்த தலைப்பு, ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் என்ற செயல்பாடு விடுதலைப்புலிகள் அமைப்பால் எந்தவொரு பரிமாணத்தில் உள்வாங்கப் பட்டது என்பதை நமக்குப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. தலைப்பின் நிழலையும் கடந்து விரியும் மலரவனின் குறிப்புகள், மகிழ்ச்சியும் துக்கமும் தீவிரமும் மரணமும் நிறைந்ததோர் நிலையில், போர் என்பது அன்றாட வாழ்வாக மாறி இருந்த ஒரு ஈழச்சூழலை கண்முன் நிறுத்துகின்றன. "குவேராவின் நினைவு ஒரு தழும்பல்லதொடர்வதற்காக தன்னைத்தானே கிழித்துக்கொள்ளும் ஒரு தொடர்ச்சி அது." மலரவனின் மரணமும் அப்படிப்பட்டதுதான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866