போரின் மறுபக்கம் அகதியின் அனுபவங்கள்

ஆசிரியர்: தொ. பத்தினாதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 224
ISBN978-81-89945-18-3
Weight300 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அது தரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந் திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இது தான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக வாழ்வின் நேரடி அனுபவம் தான் இந்தத் தன்வரலாறு. ஒருபுறம் பாராமை யாகவும் மறுபுறம் பெரும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அணுகப்பட்டுவரும் இன்றைய ஈழத் தமிழர் பிரச்சனையின் வாழ்வனுபவத்தை மொழியின் சாகசமாகவோ கழிவிரக்கமாகவோ மாற்றி கவனம்! கோராமல் வாழ்வின் இருத்தலுக்கும் அறம்சார்ந்த கேள்விகளுக்குமிடையே இருந்து எழுதிச் செல்கிறார் தொ.பத்தினாதன்.அரசியல் இயந்திரங்களாலும் அரசியல் கட்சிகளாலும் சமூகத்தின் பொதுப் புத்தியாலும் அலைக்கழிக்கப்பட்டு இன்றைய வாழ்விற்குப் பழக்கப்பட்டுப் போன அகதிகளை நம்முடைய தமிழ்ச் சமூகம் எவ்வாறு வைத்திருக்கிறது என்பதற்கான கால் நூற்றாண்டு சாட்சியம் இந்நூல். மெல்லிய சுயவிமர்சனத்தோடு நகரும் இந்த நூல் எதிர்காலத்தில் எழுதப்படப்போகும் அகதிகள் சார்ந்த பதிவுகளுக்கான வலிமையான தொடக்கம். வெளிவந்த போது பரவலான கவனத்தைப் பெற்ற தன்வரலாற்றின் செம்மைப்படுத்தப் பட்ட இரண்டாம் பதிப்பு

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பத்தினாதன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :