போட்டோஷாப்

ஆசிரியர்: காம்கேர் கே.புவனேஸ்வரி

Category கணிப்பொறி
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 752
ISBN978-81-8476-651-6
Weight850 grams
₹425.00 ₹403.75    You Save ₹21
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள போட்டோஷாப் புத்தகத்தை, லேட்டஸ்ட் வெர்ஷனான அடோப் போட்டோஷாப் க்ரியேட்டிவ் க்ளவுட் 2014 &ஐப் பின்பற்றி எழுதியுள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி.
இருந்தாலும் போட்டோஷாப்பின் முந்தையப் பதிப்புகளை பயன்படுத்துபவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் புத்தகத்தில் பொதுவான கான்செப்ட்களில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஆகாய கம்ப்யூட்டர் எனப் பொருள்படும். உலகளாவிய சர்வரில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள். அந்த சாஃப்ட்வேர்களை இங்கிருந்தபடியே பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பத்துடன் அடோப் நிறுவனம் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததின் விளைவாகத் தோன்றியதே அடோப் கிரியேட்டிவ் கிளவுட் என்ற பெயர் மாற்றம்.
போட்டோஷாப்பை முதன்முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பவர்களை மனதில்கொண்டே இந்தப் புத்தகத்தை தயார்செய்துள்ளார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயமாகப் படித்துப் பார்த்து அதில் கொடுத்துள்ள வழிமுறைகளுடன் பயன்படுத்திக்கொண்டே வந்தால் போட்டோஷாப்பை முழுமையாகக் கற்றுக்கொண்டு விடலாம்.
புகைப்படங்களைக் கையாள்வதற்கான பல்வேறு சிறப்புச் செயல்பாடுகளைக்கொண்ட போட்டோஷாப் சாஃப்ட்வேரில் உள்ள டூல்கள், மெனுக்கள், லேயர்கள் போன்றவற்றை எளிமையான வழிமுறைகளுடன் விளக்கியிருப்பதுடன் 3ஞி தொழில்நுட்பம், வெப்சைட்டுகளின் பேனர்கள் மற்றும் வெப் பக்கங்களை வடிவமைத்தல், அனிமேஷன்களை உருவாக்கும் முறை, புகைப்படங்களில் கலர் கரெக்ஷன்கள் செய்யும் நுணுக்கம் போன்ற பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏராளமான விளக்கப்படங்களுடன் விளக்கியுள்ளார்.
ஒரு மல்டிமீடியா அனிமேஷன் படைப்பை விஷுவலாகப் பார்க்கும்போது கிடைக்கும் தெளிவு இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
காம்கேர் கே.புவனேஸ்வரி :

கணிப்பொறி :

விகடன் பிரசுரம் :