போட்டித் தேர்வுகளுக்கு உதவும் பொதுத்தமிழ் வினா விடைகள் 1000

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category பொது அறிவு
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionDec 2015
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 15 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் மிகப் பழமையான மொழி, இனிமையானது. தமிழ் இலக்கியச் சுவையை அனுபவித்தவர்களை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டுவது தமிழின் தனிச்சிறப்பாகும். அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழன்னைக்கு தங்கள் படைப்புகளால் மலராபிசேகம் செய்து வரும் தமிழ் அறிஞர்கள் ஏராளம், ஏராளம். தற்காலத்தில் தமிழின் சிறப்பும், தொன்மையும் உணரப் பெற்று அனைவரும் தமிழின் சிறந்த படைப்புகளை கற்கின்றனர்.பள்ளி, கல்லூரி அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் தமிழுக்கு தனியிடம் உள்ளது. மட்டுமின்றி பல்வேறு போட்டித் தேர்வுகளில் தமிழ் குறித்த "வினா - விடைகள் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு இடம் பெறுகிறது.தமிழ், தமிழ்க்கவிதை, நூல்கள், கவிதைகள், இலக்கணம், கவிஞர்கள், படைப்பாளிகள், தமிழ் செய்திகள் உட்பட 1000 தகவல்கள் வினா, விடை வடிவில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் எழுதுபவர்க்கு உதவிடும் இந்நூலை, தரமான நூல்களை வெளியிட்டு வரும் நிவேதிதா பதிப்பகத்தார் செம்மையாக வெளியிட்டுள்னர். வாங்கிப் படித்துப் பயன்பெறுக. வாழ்க வளமுடன்.

அகஸ்தீஸ்வரம் ஊரில் யோ. சாமுவேல் - சா. பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த சா. அனந்தகுமார் வேளாண்மை பட்டயம் பெற்றவர். முன்னணி பத்திரிகைகளில் 2000க்கும் மேல் கட்டுரை, ஜோக்ஸ், துணுக்குகள் எழுதியுள்ள இவர்,om நூல்களும் அதிக அளவில் எழுதி வருகிறார். இதுவரை 136 நூல்கள் வெளியாகியுள்ளன. 40 நூல்கள் வெளிவர உள்ளன. சிறந்த தொகுப்பாளர் விருது, சிருஷ்டி சம்மான், பாவலர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நிகழ்கால கல்விமுறையில் மத்திய மாநில அரசுகளின் கல்வித் திட்டங்களில் தமிழுக்கான முக்கியத்துவமும், மதிப்பும் குறைந்து காணப்படுகிறது.
ஆங்கில வழிக்கல்வியில் பெற்றோர்களும், குழந்தைகளும் பெரிதும் மோகம் கொண்டுள்ளதால் பாடத்திட்டங்களில் கட்டாயமாக்கப்பட்ட தமிழ்ப் பாடங்களில் இன்றைய மாணவர்களுக்கு போதிய ஞானம் இருப்பதில்லை .
மதிப்பெண்களைக் குறிகோளாகக் கொண்டு பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடிக்கும் மாணவர்கள் மேல்நிலைப் படிப்புகளில் நுழைவுத்தேர்வுகளிலும், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் தமிழில் தள்ளாடுகிறார்கள்.
அந்த வாட்டத்தைப் போக்க, திண்டாட்டத்தைத் தீர்க்கும் நோக்கில் தயாரான நூல் இது.பொதுத்தமிழ் பற்றிய 1000 அரிய தகவல்களை வினா - விடை வடிவில் அழகுற தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சா.அனந்தகுமார்.
இந்த நூல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வங்கித் தேர்வு, வி.ஏ.ஓ. தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாகும் என்பது உறுதி. - போட்டித் தேர்வுகளுக்கு உதவும் 1000 பொதுத்தமிழ் வினா - விடைகள் என்ற இந்நூலை வெளியிடுவதில் மாணவர்களுக்கே ஆற்றும் பெரும் சேவையாகக் கருதுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

பொது அறிவு :

நிவேதிதா பதிப்பகம் :