போகர் நிகண்டு 1200 மூலமும் உரையும்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaperback
Pages 382
Weight400 grams
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபோகர் பல இடங்களில் பொன்னாகும் பொன்னாகும் பொன்னாகும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே இந்த அறிவியல் கருத்துக்களை வைத்து முறையாக நாம் ஆராயத் தொடங்கி இருந்தால் இதற்குள் இந்த நாடு முழுவதுமே பொன்னாகப் போயிருக்கும்.
இவ்வளவு அறிவுச் செல்வங்களையும், ஆற்றலையும் வைத்துக் கொண்டும், நாம் அந்நியரால் மதியிலிகள் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடப்பவர்கள் என்று கேவலமாக மதிக்கத்தக்க அளவில் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதனை நினைக்கும் பொழுது வெட்கப்படுவதா, வேதனைப் படுவதா என்று தெரியவில்லை.
பதினான்காம் நூற்றாண்டிலேயே ஒரு ஜெர்மானியர் நமது நாட்டுக்கு வந்தார். தமிழ் கற்றுத் தேறினார். எண்ணற்ற ஓலைச் சுவடிகளை வாரிக் கொண்டு சென்றார். என்பதைக் கேள்விப்படும் பொழுது, அறிவுச் செல்வங்களை அறிந்து கொள்வதற்குக்கூட இயலாதவர்களாக இருந்தோம்.


இது ஒரு பொற்களஞ்சியம்! வயிரமணிக் குவியல்!போகர் பல இடங்களில் பொன்னாகும் பொன்னாகும் பொன்னாகும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே இந்த அறிவியல் கருத்துக்களை வைத்து முறையாக நாம் ஆராயத் தொடங்கி இருந்தால் இதற்குள் இந்த நாடு முழுவதுமே பொண்ணாகபோயிருக்கும் இவ்வளவு அறிவுச் செல்வங்களையும், ஆற்றலையும் வைத்துக் கொண்டும், நாம் அந்நியரால் மதியிலிகள் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடப்பவர்கள் என்று கேவலமாக மதிக்கத்தக்க அளவில் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதனை நினைக்கும் பொழுது வெட்கப்படுவதா, வேதனைப் படுவதா என்று தெரியவில்லை. பதினான்காம் நூற்றாண்டிலேயே ஒரு ஜெர்மானியர் நமது நாட்டுக்கு வந்தார். தமிழ் கற்றுத் தேறினார். எண்ணற்ற ஓலைச் சுவடிகளை வாரிக் கொண்டு சென்றார். என்பதைக் கேள்விப்படும் பொழுது, அறிவுச் செல்வங்களை அறிந்து கொள் வதற்குக்கூட இயலாதவர்களாக இருந்தோம். அவற்றை நாம் புறக்கணித்தோம், கொச்சைப் படுத்தினோம். நமக்கு நாமே ஒன்றும் தெரியாதவர்கள், மூடர்கள் என்று பட்டம் சூட்டிக் கொண்டு பெருமையும் ! அடைந்தோம் என்றுதான் நினைக்க வேண்டி உள்ளது.போகர் இந்த நிகண்டில் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் ஒரு அறிவியல் அற்புதம்!இவ்வுலகம் பஞ்ச பூதங்களால் ஆனது என்று அறிவோம், உலோகம், கல், மண், இவற்றின் வேதியல் மாறுதலே - இவை தீ, காற்று, நீர் ஆகியவற்றால் அடைந்த வேதியல் மாறுதல்களின் விளைவே - நாம் காணும் எல்லாப் பொருள்களும்! அசைவனவும் அசையாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களும்! உயிர் உள்ளவையும். இல்லாதவையும் ஆன எல்லாப் பொருள்களும்!மனிதனின் உடலில் வெப்பம் இருக்கிறது. தண்ணீர் இருக்கிறது. காற்று இருக்கிறது. ஆகாயத்தின் கூறான ஜீவனும், பூமியின் கூறான கல், மண், உலோகங்களின் சத்துக்களும் உள்ளன. தாவரங்களின் கூறு இந்த உடலில் உள்ளது என்பது சொல்லாமலே விளங்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :