பொழுதைப் பொன்னாக்குவோம்

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
Pages 80
First EditionJan 2016
ISBN81-8446-6217-4
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியன் போல, இப்படி வந்து அப்படிப் போகிறது நேரம். அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துத்தான், அது வெறுமனே வீசி எறியப்படும் காசா அல்லது நமது முன்னேற்றத்துக்கு உதவும் மூலதனமா என்பதைச் சொல்லமுடியும்.இருபது வயதிலே இருக்கிற உடல் வலுவும், சுறுசுறுப்பும் அறுபது வயதிலே இருக்குமா? நேரத்தின் மதிப்பையும், அருமையையும், அறுபது வயதிலே அறிந்து கொள்வதைவிட, இருபது வயதிலே உணர்ந்துகொள்வதல்லவா உத்தமம்? வாழ்க்கை என்னும் மாளிகையை வசந்த மாளிகையாக வடிவமைக்க அந்த இளமைஞானம் பெரிதும் உதவுமே. அலாவுதீனின் அற்புத விளக்கைத் தேய்த்தால், மாபெரும் சக்தி கொண்ட பூதம் மண்டியிட்டு ஏவல் கேட்கும். கால தேவனின் மணிகளை கவனமாகக் கையாண்டால், கனவுகள் ஒவ்வொன்றும் நனவுகளாய் மலரும் .

உங்கள் கருத்துக்களை பகிர :