பொறுப்பற்ற குடும்பம்

ஆசிரியர்: ஊர்சுலா ராகவ்

Category கவிதைகள்
Publication புது எழுத்து
FormatPaper Back
Pages 48
First EditionDec 2019
Dimensions (H) 23 x (W) 15 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereராகவனை சந்தித்தது அவன் பள்ளி செல்ல மறுத்த காலத்தில் தான். அவனது தந்தையும் வீடு திரும்ப விரும்பாத காலத் தொடக்கம் அது. நிறுவன எதிர்ப்பை தன் குடும்பத்திலிருந்தே துவக்கியவன் யவனிகா ஸ்ரீராம். இன்று தமிழ் நவீன கவிதையின் உச்சம். கால் நூற்றாண்டு கழித்து இதோ ஊர்சுலா ராகவ் 'பொறுப்பற்ற குடும்பம்' என்ற கவிதைத் தொகுப்போடு நம் கவனம் குலைக்க வந்திருக்கிறான். இதற்கு முன்னும் இலக்கியத்தில் வாரிசுகளின் வரவு இருந்திருக்கிறது. கல்யாண்ஜி அவர் அணிந்துரையளித்த கனிமொழி ஆகியோரின் நினைவு கூட வருகிறது. இப்படி ஒப்பிடுவது பொருத்தமில்லாமலும் இருக்கலாம். ஆனால் எந்த அனுகூலமும் பின்புலமுமற்ற இவன் கவிதைகள் எழுதத் தொடங்கியது தான் கொலை செய்ய விரும்பிய தந்தையிடமிருந்துதான். இப்போதோ தனது மகனிடம் கொலையுறுவதற்கு தனது கவிதைகளை பயிற்றுவிக்கிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

புது எழுத்து :