பொருட்களின் கதை
ஆசிரியர்:
ஆனி லியோனார்டு
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1517-9950-2815-9259
{1517-9950-2815-9259 [{புத்தகம் பற்றி பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருள் என நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிபலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள் ஆனி லியோனார்டு சுற்றுச்சூழல் சூப்பர் ஸ்டார் குப்பைக் குழிகளின் மீது பித்துப்பிடித்தவர் 'த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்' என்னும் பரபரப்பூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் ‘மிகவும் அதிகமாக' இருக்கின்றன என்பதுதான். அதிர்ச்சியூட்டும் இந்த நூலில் லியோனார்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களின் கதையையும் கூறுகிறார் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், கைப்பேசிகள், ஜீன்ஸ் துணி, புத்தகங்கள், பூச்சிக்கொல்லிகள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவை எங்கிருந்து வருகின்றன, எவ்வாறு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, வீசியெறியப்படும்போது அவை உண்மையில் எங்கே சென்றடைகின்றன. நமது ‘பொருள்சார் பொருளாதாரம்’ வழியாக நாம் செய்யும் சாகச சவாரியில் நம் வாழ்வு நாசமாவதையும் புவிக்கோளின் அழிவிற்கான கட்டுப்பாடில்லா நுகர்வுப் பழக்கங்களையும் லியோனார்டு விவரித்துக் காட்டுகிறார். நம்பிக்கை இருக்கிறது இந்தப் புத்தகத்தில் பேசப்படும் புரட்சிகரமான எளிய கோட்பாடு உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866