பொய்த் தேவு

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 296
ISBN978-81-89359-87-4
Weight350 grams
₹350.00 ₹297.50    You Save ₹52
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார்வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள் வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள்வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதா மாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் 'சிறந்த' மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :