பொன்னியின் செல்வன் (பாகம் 1 - 5)

ஆசிரியர்: அமரர் கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication விகடன் பிரசுரம்
FormatHardbound
Pages 2118
ISBN978-81-8476-399-7
Weight2.80 kgs
₹2000.00 ₹1900.00    You Save ₹100
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான 'பொன்னியின் செல்வன்', தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று!
ஒலியும் ஒளியும் போல... எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளிகூட விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவர்களின் புதல்வர் ஓவியர் ம.செ! தந்தை மீது கொண்ட பற்று, கலை மீது கொண்ட ஆர்வம் ஆகியவை மட்டுமின்றி... ஒரு பொக்கிஷத்தைக் காப்பாற்றித் தருகின்ற பொறுப்பு உணர்வின் மிகுதியையும் ம.செ-விடத்தில் கண்டு வியக்கிறோம்.
ஐந்து பாகங்களாக இதைத் தொகுத்து வழங்கும் எண்ணத்தைச் சொன்னபோது, அமரர் கல்கி அவர்களின் புதல்வர் 'கல்கி' கி.ராஜேந்திரன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளியிட முடியாது. நெகிழ்ச்சியின் உச்சத்தில், இந்தப் பணிக்குத் தமது ஆசிகளை அளித்து தொகுப்பின் சிறப்பைக் கூட்டியிருக்கிறார்.பேனா மன்னரின் வாரிசுக்கும், தூரிகை மன்னரின் வாரிசுக்கும் மனமார நன்றி சொல்லி... வாருங்கள், சரித்திரத்தை புத்தம் புதிதாகப் புரட்டிப் பார்ப்போம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

சரித்திரநாவல்கள் :

விகடன் பிரசுரம் :