பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) - பாகம் 1

ஆசிரியர்: கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication நிலா காமிக்ஸ்
FormatPaperback
Pages 379
ISBN978-81-940009-3-8
Weight1.16 kgs
₹900.00 ₹855.00    You Save ₹45
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்", நம் தமிழ் வரலாற்று நாவல்களின் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களில் வீரம், தீரம், பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை, நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறையும் இந்த கதைகளை படக்கதைகள் (Comics) மூலம் படித்து, மகிழ்ச்சியடைய வேண்டுமென்கின்ற எண்ணத்தில் உருவானதே “நிலா காமிக்ஸ்"-இன் இந்த முயற்சி. இதை சிறுவர் சிறுமியர், இளைஞர்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக இந்த காவியத்தின் தீவிர வாசகர்கள் படித்து இந்த படைப்பை விரும்புவார்கள் என நம்புகிறோம்.இன்று உலகமெங்கும் வாழும் பெற்றோர்களின் அச்சமே அடுத்த தலைமுறை நம் வரலாறு, மொழி, பண்பாடு இவற்றுடனான தொடர்பு அறுந்துவிடுமோ என்பதே. இதற்கான பல தீர்வுகளில் இதுவும் ஒன்று.
இது வரலாறு சார்ந்த கதை என்பதால் ஒரு சில நிகழ்வுகளை கல்கி அவர்கள் மூலக்கதையில் நமக்கு விளக்கம் கூறியுள்ளது போல, பல சிறிய விளக்கங்களை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அளித்தால், இந்த முயற்சியின் முழுமையான பலன் அடுத்த தலைமுறையைச் சென்றடையும்.இதனையடுத்து மேலும் பல நன்னூல்களை இந்த Comics வடிவத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தமிழ் கூரும் நல் உலகின் வாழ்த்துகளையும் ஆதரவையும் எதிர் நோக்கி உள்ளோம்..

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சரித்திரநாவல்கள் :

நிலா காமிக்ஸ் :