பொது சிவில் சட்டம்: பாஜகவின் இன்னொரு தாக்குதல்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category சட்டம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 82
ISBN978-81-7720-266-3
Weight150 grams
₹65.00 ₹58.50    You Save ₹6
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'பொது சிவில் சட்டம்’ என்பதை முஸ்லிம்களைச் சீண்டுவதற்கான தங்களின் ஆயுதங்களில் ஒன்றாக பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னொருபக்கம் தங்களின் தனித்துவமான அடையாளங்களை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு மிகப் பெரிய தாக்குதலாக சிறுபான்மை மக்கள் அஞ்சுகின்றனர் .

இந்தப் பிரச்சினைக்கு ஒரு மூன்றாவது பக்கமும் உள்ளது. பொது சிவில்சட்டம் சாத்தியமில்லை என்பதில் உறுதியாக உள்ள பல முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் பெண்கள் இயக்கத்தினரும் அதேநேரத்தில் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தில் திருக்குர்ஆனின் கட்டளைகளை மீறாமல் சில திருத்தங்கள் செய்வது அவசியம்தான் என்கின்றனர். இந்தக் கருத்துகள் தொடர்பான ஒரு நடுநிலையான பார்வையை முன்வைக்கிறது அ. மார்க்ஸின் இந்நூல்.

இது தொடர்பான சுமார் 27 நீதிமன்றத் தீர்ப்புகள், ஏராளமான நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்நூல், பொது சிவில் சட்டம் குறித்த ஒரு முக்கிய ஆவணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

சட்டம் :

அடையாளம் பதிப்பகம் :