பொது அறிவுக் கொத்து

ஆசிரியர்: இராஜாவரதராஜா

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 228
First EditionJul 2015
3rd EditionFeb 2020
Weight250 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹220.00 $9.5    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன. இத்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மாணவர்களுக்கு முதுமை யான வழிகாட்டும் சிறந்த நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்" என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க, இந்நூலாசிரியர் என் ஆருயிர் நண்பர் பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா பிஷப் ஹீபர் கல்லூரியில் என்னோடு படிக்கும் காலத்தில் ஆர்வத்தோடு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டவர்; போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்; பரிசுகள் பெற்றவர்; நினைத்ததைத் திட்டமிட்டு முடிக்கும் ஆற்றல் உடையவர்; நண்பர்கள் புடைசூழ இருப்பவர்; பேராசிரியர்களிடத்து நல்ல மாணவன் என்ற மதிப்பைப் பெற்றவர்; இதழியல் ஈடுபாட்டால் பிஷப் ஹீபர் கல்லூரிச் செய்தி மடலின் நிருபராகப் பணியாற்றி யவர்; கல்லுரியின் மாணவர் தலைவராக விளங்கியர்; இதழியல் சார்ந்த நூல்களை வெளியிட்டவர்.
நண்பர் தான் படித்தவற்றை, தொகுத்து வைத்திருந்தவற்றை நூலாக்கியுள்ளார். இந்நூல் சங்கம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு , காப்பியங்கள், இலக்கணங்கள், கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், சிற்றிலக்கியம், பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யப் பிரபந்தம், இதழியல், அறிவியல், வரலாறு, பொருளியல், மருத்துவ இயல், ஆன்மிகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் வினாவிடை அமைப்பில் கொத்தாகத் தொகுக்கப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :