பொங்கும் பூம்புனல்

ஆசிரியர்: சூர்யகாந்தன்

Category சுற்றுச்சூழல்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8446-811-3
Weight200 grams
₹90.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



என்னைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறச் சூழல்களும், காலகாலமாய் விளைவித்துக் கொடுத்த காடுகரைகளும், உழைத்துக்கொண்டே இருக்கும் எளிய மக்களும்... அவர்கள் புழங்கும் கிராமங்களும், நகரங்களும், வனவிலங்குகளும், பறவை இனங்களும், சதா இரைச்சலிட்டுக்கொண்டு மனிதர்களையும், பொருட்களையும் சுமந்தபடி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களும், கண்களில் படுகிற நிறங்களும், வடிவங்களும் என எத்தனை எத்தனையோ தினம்தினம் சுழன்று சுழன்று வந்தவாறே உள்ளன.பெரும்பாலானவர்கள் இதைக் கண்டும், சகித்தும், குமுறியும், கொந்தளித்தும், அழுதும், சிரித்தும் சுகித்தவாறே இருக்கின்றனர். அவர்களில் ஒருவனான நானும் இவற்றில் சிலவற்றை அவ்வப்போது எளிய கட்டுரைகளாக எழுதி வந்துள்ளேன். இதை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள், 'மக்களின் குரலாக' இவைகள் அமைந்திருப்பதைக் கண்டறிந்து எனக்குத் தெரிவித்தபோது இதன் எதிரொலியை உணர்ந்து கொள்ள முடிந்தது. பெரிய அரசியல் பின்புலமோ, பதவிச் செல்வாக்கோ, பொருளாதார பக்கபலமோ எவைகளுமே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கும் என்னுடைய எளிய கருத்துக்களுக்கு இத்தனை ஆதரவு கிடைக்கிறதே என்று இதயம் அடைந்த மகிழ்ச்சி அருமையானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சூர்யகாந்தன் :

சுற்றுச்சூழல் :

விஜயா பதிப்பகம் :