பேலியோ வழி ஆரோக்கியம் 2.0

ஆசிரியர்: டாக்டர்.அ.ப. ஃபரூக் அப்துல்லா

Category உடல்நலம், மருத்துவம்
Publication ஆரோக்யம் நல்வாழ்வு
FormatPaper Back
Pages 162
Weight200 grams
₹175.00 ₹157.50    You Save ₹17
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here• பேலியோவின் அடிப்படை. * மாவுச்சத்து / கொழுப்புச்சத்து * உணவின் அறிவியல் அடிப்படைகள், எளிமையான தமிழில் விளக்கங்கள். • வாரியர் / மேக்ரோஸ் பற்றிய விளக்கங்கள். * வெயிட்லாஸ் டயட் சார்ட். • டயபடிக் டயட் சார்ட். நமது அன்றாட உணவுகளில் உள்ள பிரச்னைகள், அதற்கான அறிவியல் விளக்கங்கள் என்று விறுவிறு தகவல் சுரங்கமாக விளக்குகிறது ஆரோக்கியம் 2.0.

இவ்வுலகத்தைப் படைத்து பல்லுயிர்களுக்கும் உணவளித்து பரிபாலிக்கும் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் உணர்வுகளுள் முக்கியமானது பசி, மனிதர்களாகிய நாம் தினமும் மூன்று முறை பசி எடுத்து உணவை உண்டு அந்தப் பசியை சரி செய்கிறோம். ஆக, உணவு என்பது நம் வாழ்வின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் அரசியல் சார்ந்து வியாபாரம் சார்ந்து வளைக்கப் பட்டு, நாம் உண்ணும் உணவை நாம் முடிவு செய்வதை விட, நமக்கு யாரென்றே தெரியாதவர் முடிவு செய்யும் நிலையில் இருக்கிறது. சரியான உணவு முறை எது? என்ற எனது தேடலின் முதல்படிதான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் இருக்கும் அத்தியாயங்களில் நமது அன்றாட உணவு முறையில் உள்ள அடிப்படை தவறுகள் மற்றும் அதனால் நமக்கு விளைந்த நோய்கள், அவற்றை சரிசெய்ய உணவு. முறைகளில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரலாம் என்பது போன்றவற்றை அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

ஆரோக்யம் நல்வாழ்வு :