பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி -2
₹300.00 ₹285.00 (5% OFF)

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி -1

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கட்டுரைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHardbound
Pages 696
Weight650 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஅண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொது மேடை வானில் முன்பு ஒளிர்ந்து மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் வெங்கதிரவன் அண்ணா அவர்களே என்பதை அறியாதவர், இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர், தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.

தமிழக இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது. தமிழ் உமது முரசாகட்டும், பண்பாடு உமது கவச மாகட்டும், அறிவு உமது படைக்கலன்களாகட்டும், அறநெறி மது வழித்துணையாகட்டும், உறுதியுடன் செல்வீர் பணியாற்றுவீர்! பாட்டு மொழியுடைய நமது தாயகம், வாழ, அறிவுலகிற்கு அசைவிலா துணையாக நிற்கும் தகுதி பெற்றிட தாய்மைக் கனிவை வளர்த்திட ஓய்வின்றி முயலுங்கள், முயன்றால் வெற்றி நமதே என்று வழிகாட்டிய பேரறிஞர் அண்ணா நமக்கு வாரி வாரி வழங்கியுள்ள கருத்துக் கனிகள் இன்னும் இருட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன, அவற்றையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து வருங்கால மக்களுக்கு வாழ்வைத் துலங்கிடச் செய்ய அரும்பணியாற்ற வேண்டுவது நூ லாக்குவோர் தலையாய கடமையும் பணியுமாகும். அந்த வகையிலேதான் அண்ணாவின் 194டைப்புகளில் பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் என்ற பெரும் தொகுப்பு நூல் உங்கள் கரங்களில் தவழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கட்டுரைகள் :

பூம்புகார் பதிப்பகம் :